ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ஏரி ஆக்கிரமிப்பால் பாதிக்கப்படும் நெற்பயிர் விவசாயம்



கும்மிடிப்பூண்டி ஜன 22

ஏரிகள் நிறைந்த மாவட்டமான திருவள்ளூர் அமைந்துள்ளது கும்மிடிப்பூண்டி பேரூராட்சி. இதன் தொடக்கத்திலே அமைந்துள்ளது தாமரை ஏரி. 40 ஆண்டுகளுக்கு முன்னர் மொத்தம் 1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் தற்போதைய பரப்பளவு 700 ஏக்கருக்கும் குறைவாக உள்ளது. விவசாய நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாவும் மற்ற பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரியினை தூர்வாரி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை முதல் கொல்கத்தா வரை போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த ஏரியின் கரையினை இரண்டு முறை மாற்றியமைத்துள்ளனர். மேலும் தற்போது அந்த நெடுஞ்சாலை 6 வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளதால் ஏரியின் கரையை மூன்றாவது முறையாக மாற்றியமைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.

ஏரியின் நீர்மட்டம் எவ்வளவு மழை பெய்தாலும் சில வாரங்களிலேயே வற்றிவிடுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையின்போது தேசிய நெடுங்சாலைக்காக மாற்றி அமைக்கப்பட்ட கரை உடையும் அபாயம் ஏற்படும் அளவு நீர் நிறப்பியது. கரிமேடு எனும் ஏரி ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதி முழுமையாக நீரில் முழ்கியது. ஆனால் தற்போது இரண்டு மாதங்கள் கூட முழுமையாக ஆகாத நிலையில் ஏரியில் நீர்மட்டம் 3 அடிக்கும் குறைவாகவே உள்ளது.

ஏரியின் பாதிபகுதிகளுக்குமேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதியாககவும் மீதம் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர், குடும்ப அடையாள அட்டை, வீட்டு வரி போன்ற அனைத்து அரசு உரிமைகளும் உள்ளது. புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பதை அரசு தடுக்காமல் அவர்கள் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது. 

15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஏரியில் போர் அமைக்கப்பட்டு அருகிலுள்ள கிராமங்களுக்கும், சிப்காட் பகுதிக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஏரி நீரில் கலப்பதால் தற்போது நீரின் தன்மை மாறிவிட்டது. எனவே மக்கள் 10 கி.மீ தள்ளியுள்ள ஆத்துப்பாக்கம் ஏனும் கிராமத்திற்கு சென்று குடிநீர் கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.


பொதுப்பணி துறையிடம் இருக்கும் இந்த ஏரியை சரியாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பாதுகாத்தால் சோழியம்பாக்கம், ஆத்துப்பாக்கம், தேர்வழி, வழுதலம்பேடு, ரெட்டம்பேடு போன்ற பல விவசாய கிராமங்களில் நெற்பயிர் விலைச்சல் அதிகமாகும். ஏரி தூர் வாரப்படாத காரணத்தால் நிலத்தடி நீரும் சரியாக தேங்குவதில்லை. எனவே தற்போது இப்பகுதி மக்கள் மூன்று போகம் விளைவிக்கும் நிலங்களை இரண்டு போகத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.








மோசமான நிலையில் சென்னை சேப்பாக்கம் இரயில் நிலையம்













17 ஆகஸ்ட் 2015, சேப்பாக்கம்: சென்னையின் முக்கிய இரயில் நிலையங்களில் ஒன்றான சேப்பாக்கம் இரயில் நிலையத்தின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது.
    சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரி மார்கத்தில் அமைந்துள்ளது சென்னை சேப்பாக்கம் இரயில் நிலையம். தினந்தோரும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த இரயில் நிலையத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பொது கழிவறை, குடிநிர் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மிகவும் அவதிப்படுகின்றனர்.
    இந்த இரயில் நிலையத்தில் இருக்கும் மூன்று எக்ஸ்கலேட்டர்களும் பழுதாகி உள்ளதால் வயதான பயணிகள் இரயில் நிலையத்தின் இரண்டாம் மாடிக்கு செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் சேப்பாக்கம் இரயில் நிலையத்தில் முறையான வாகன நிறுத்தும் வசதி இருந்தும் பயணிகள் அதனை பயன்படுத்த தயங்குனிறார்கள். இதுகுறித்து அங்கு வாகனம் எடுக்க வந்த ஓர் பயணி கூறியதாவது,
    “நான் கடந்த பல ஆண்டுகளாக இந்த இரயில் நிலையத்திலிருந்து பயணிக்கிறேன். இங்கு முறையான வாகன நிறுத்தத்திற்கான காண்ட்ராக்டர் இல்லாததால் நாங்கள் இங்கே வாகத்தை நிறுத்துவதில்லை. அருகிலுள்ள திருவல்லிக்கேணி இரயில் நிறுத்தத்தில் தான் எப்போதும் நிறுத்துவேன். இந்த இரயில் நிலையத்தில் நிறுத்தினால் வெளியில் தான் நிறுத்த வேண்டும். ஏனென்றால் சேப்பாக்கம் இரயில் நிலையத்தின் வெளியில் எப்போதும் போலீஸார் இருப்பார்கள். அவர்களின் கண்காணிப்பில் இருப்பதால் வாகனத்திற்கு ஏதும் ஆகாது. ஆனால் வாகன நிறுத்தத்தில் நிறுத்தினால் வாகனத்தின் பாகங்கள் திருடப்படுகின்றன. மேலும் வாகத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் போகிறது” என்றார் அவர்.
    பெரும்பாலான பறக்கும் இரயில் நிலைங்களில் கறிப்பறை வசதி இல்லை. அதுபோலவே இங்கும் கழிப்பறைகள் இருந்தும் பு+ட்டிய நிலையிலோ அல்லது பயன்படுத்த முடியாத நிலையிலோ உள்ளது.
    குடிநிர; மற்றொரு பெரும் பிரச்சனையாக உள்ளது. சுத்திகரிப்பு குடிநீர; இயந்நதிரம் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்யாமல் உள்ளனர். இதனால் பயணிகள் குடிநீர் தொட்டியிலிருந்து வரும் அசுத்தமாக தண்ணீரை பயன்படுத்தும் மோசமான நிலையில் உள்ளனர். அந்த குடிநீர் தொட்டிகளும் முறையான பராமரிப்பின்றி புகையிலை அசுத்தங்கள் நிறைந்து உள்ளது.
    மேலும் இரயில் நிலையத்தின் மேல் அடுக்கிலிருந்து இறங்கி வரும் பயணிகளுக்கும், மேலே செல்லும் பயணிகளுக்கும் வெளியேறும் பாதை அறிவதில் சிரமம் அதிகம் உள்ளது. மற்ற இரயில் நிலையங்களை விடவும் மிகவும் குறுகலான பாதையே உள்ளதால் பயணிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
    இரயில் நிலையத்தின் கீழ்தளத்தில் இரயில்வே சம்மந்தமான பொருட்கள் குப்பை போன்று போட்டு வைக்கப்பட்டுள்ளது. வாகன நிறுத்தத்திற்கு ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் இரல்வே பொருட்கள் பொட்ட வைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் இங்கு ஷெடுல் விளையாடி கொண்டுள்ளனர்.
    சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள், மாநில கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சென்னையின் சுற்றுலாதளமான மெரினா கடற்கரை செல்வதற்கு என்று ஒரு நாளைக்கு பல பயணிகளை பார்க்கும் இந்த இரயில் நிலையத்தை சுத்திகரிப்பு செய்தல் வேண்டும் என்று மக்கள் பலர் கருதுகின்றனர்.

மழைக்கு இறையான குடிசை



கும்மிடிப்பூண்டி நவ. 13: கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள குடிசை பகுதியில் இரண்டு குடிசைகள் மழையால் இடிந்தன.
கும்மிடிப்பூண்டி பெருந்து நிலையத்திற்கு அருகிலுள்ளது கல்லுக்கடைமேடு பகுதி இங்கு குடிசைகள் அதிகம் உள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் கனமழை மற்றும் காற்றின் காரணமான இப்பகுதியிலுள்ள இரண்டு குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமான ஏற்கனவே பழுதடைந்திருந்த ஓர் குடிசை வீட்டின் சுவர் இடிந்து மற்றொரு குடிசை சுவற்றின் மீது விழுந்தது. பழுதடைந்திருந்த குடிசையில் ஆட்கள் யாரும் இல்லை ஆனால் மற்றொர வீட்டில் மாணிக்கம் என்பவரும் அவரது மனைவி சாந்தி மற்றும் இரண்டு குழைந்தைகள் இருந்தனர்.
சுவர் இடிந்து விழுந்ததில் சாந்தி வலது கை அடிபட்டு அருகிலுள்ள பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த குடிசையை சேர்ந்தவர்கள் அவர்களது உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். குடிசைகள் இருந்த பகுதி புறம்போக்கு நிலம் என்கதால் பேருராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை

மழையால் கும்மிடிப்பூண்டியில் இரயில் சேவை பாதிப்பு

கும்மிடிப்பூண்டி நவ. 13: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கும்மிடிப்பூண்டி – சென்னை இடையே இரயில் போக்குவரத்த பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே தாமதமாக இயங்கி வந்த கும்மிடிப்பூண்டி – சென்னை இடையேயான இரயில் போக்குவரத்து மதியத்திற்கு மேல் கும்மிடிப்பூண்டி முதல் திருவொற்றியூர் வரை குறைக்கப்பட்டுள்ளது. கொருக்குப்பேட்டையில் மழைநீர் இரயில்வே தண்டவாளத்தில் ஆறாக ஓடுவதால் இரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கும்மிடிப்பூண்டி இரயில் நிலைய மேற்பார்வையாளர் கூறியுள்ளார்.
மேலும் வட மாநிலங்களிலிருந்து சென்னை நோக்கி வரும் அதிவேக இரயில்களும் கும்மிடிப்பூண்டியிலிருந்து திருவொற்றியூர் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.இன்று காலை 11 மணி முதல் 2.30 மணி வரை பெரம்பாலான இரயில்கள் இயக்கப்படவேயில்லை அப்படியே இயக்கப்பட்டாலும் கால தாமதமாகவே இயக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னைக்கு செல்ல மக்கள் அதிகம் பயன்படுத்துவது இரயில் சேவையை தான் தற்போது இரயில்கள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இரயில்கள் திருவொற்றியூர் வரை மட்டுமே இயக்கப்படுவதால் மக்கள் திருவொற்றியூர் இரயில் நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் வரை நடந்

கண்ணகி நகரில் வீடு கொடுத்தால் போதும்


புதுபேட்டை டிச.14 : சமீபத்திய மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் கூவம் சாலைக்கு சென்றதும் சோர்வடைந்த முகத்துடன் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையுடன் சாலை ஓரத்தில் அமர்ந்து இருந்தார், உமா. அவர்களிடம் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டதும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்புகள் பற்றி கேட்டதும் கலங்கிய கண்களுடன் விவரிக்க தொடங்கினார்.
“ஒரு மாதத்திற்கு முன்னால் பெய்த மழையின் போதே எங்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் வந்து விட்டது. ஆனால் அப்போது சேற்றை வாரி போட்டுவிட்டு வாழ தொடங்கிவிட்டோம். அதோடு மழை நின்று விட்டது என்று எண்ணியிருந்த போது அடுத்த மழை பேரிடியாக அமைந்தது எங்களுக்கு. கடந்த 1ஆம் தேதி போது பெய்த கனமழையின் காரணமான அன்றிரவு எங்கள் வீட்டுக்குள் வெள்ளம் வர தொடங்கியது. எனக்கு கணவர் இல்லை நானும் எனது நான்கு மகன்களும் அந்த மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்றோம். பின் அருகிலுள்ள போலிஸ் கோட்ரசில் தங்க இடம் கொடுத்தனர்.
எங்கள் வீடு கூவம் நதிக்கு மிக அருகில் இருப்பதால் முதலிலேயே பாதிக்கப்பட்டது. மண் அரிப்பு ஏற்பட்டு கூரை மொத்தமாக சரிந்து விட்டது. வீட்டில் இருந்த எந்த பொருளையும் எடுக்க முடியவில்லை. என்னுடைய பர்சில் வைத்திருந்த என்னுடைய மகனகளின் அடையாள அட்டைகள் மட்டுமே தற்போது என்னிடத்தில் உள்ளது. மேலும் எங்களுக்கு அரசாங்த்திலிருந்து எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை. வெள்ளம் வந்த பிறகு மூன்று நாட்கள் மட்டும் அரசு உணவு கொடுத்தது. அதுவும் சுகாதாரம் இல்லாமலே இருந்தது. பொதுவாக காலையில் பொங்கல் கொடுப்பார்கள். அதில் பெரும்பாலும் புழு இருக்கும். மேலும் உப்பு இருக்காது. மதியம் கொடுக்கும் உணவில் உப்பு அதிகமிருக்கும். கேட்டால் காலையில் உப்பு இல்லததுக்கு இப்போது உப்பு சேர்த்து போட்டிருக்கோம். உங்களுக்கு இதை தருவதே அதிகம் என்று அலட்சியமாக பதில் வரும்.
இந்த மழைக்கு முன்னரே கண்ணகி நகரில் எங்களுக்கு வீடு தருவதாக பேசிகொண்டனர். ஆனால் அது வெறும் பேச்சோடு நின்று விட்டது. மழைக்கு பின்னரும் அது பற்றி பேச்சி வரவில்லை மாறாக எங்களுக்கு தாம்பரம் தாண்டி வீடு தருவதாக கூறுகிறார்கள். நான் இதே ஏரியாவில் வீதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். மேலும் என்னை போன்றே மற்றவர்களும் இங்கு சுற்றி இருக்கும் இடத்திலேயே வாழ்வாதாரம் கொண்டுள்ளனர். மேலும் எங்கள் பிள்ளைகளும் அருகிலுள்ள பள்ளிகூடங்களிலேயே படித்து வருகின்றனர். எனவே எங்களுக்கு சென்னைக்கு வெளியே வீடு கொடுத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். எங்களது வாழ்வாதரமும் எங்களது பிள்ளைகளின் படிப்பும் முற்றிலுமாக பாதிப்படையும். எனவே எங்களுக்கு கண்ணகி நகரில் வீடு கொடுத்தால் போதும்.
நான் எப்போதும் என் கடைக்கு தேவையான காய்கறிகளை பிராட்வேயில் தான் வாங்குவேன். அதுபோலவே கண்ணகி நகரிலிருந்து பஸ் பிடித்து வந்து பொருட்களை வாங்கிய பின் இங்கே வந்து எனது பிழைப்பை பார்த்து கொள்வேன். கணவர் இல்லாமல் எனது பிள்ளைகளை படிக்க வைப்பது என்பது மிகவும் கடிமான ஒன்று. அப்படியும் என் ஒருத்தி சம்பாத்தியத்தில் 4 பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறேன். அரசாங்த்தின் மூலம் எவ்வித நிவாரண பணிகளும் எனக்கு கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் வந்து குடிசை விழுந்ததை பற்றி விசாரித்து விட்டு சென்று விட்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தான் எங்களுக்கு உதவி செய்து வருகின்றனர். நேற்று கூட சிலர் வந்து பாதிக்கப்பட்ட குடிசைகளை சுத்தம் செய்ய உதவினர். நாங்கள் தற்போது இருக்கும் சூழலில் இப்போதே கிளம்பி கண்ணகி நகர் போக சொன்னாலும் போய்விடுவோம். எங்களிடம் எந்த வித உடைமைகளும் இல்லை. எனவே அரசு எங்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்”.