கும்மிடிப்பூண்டி ஜன 22
இந்த ஏரியினை தூர்வாரி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் ஆகிவிட்டது. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை முதல் கொல்கத்தா வரை போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த ஏரியின் கரையினை இரண்டு முறை மாற்றியமைத்துள்ளனர். மேலும் தற்போது அந்த நெடுஞ்சாலை 6 வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளதால் ஏரியின் கரையை மூன்றாவது முறையாக மாற்றியமைக்க பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறது.
ஏரியின் நீர்மட்டம் எவ்வளவு மழை பெய்தாலும் சில வாரங்களிலேயே வற்றிவிடுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையின்போது தேசிய நெடுங்சாலைக்காக மாற்றி அமைக்கப்பட்ட கரை உடையும் அபாயம் ஏற்படும் அளவு நீர் நிறப்பியது. கரிமேடு எனும் ஏரி ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதி முழுமையாக நீரில் முழ்கியது. ஆனால் தற்போது இரண்டு மாதங்கள் கூட முழுமையாக ஆகாத நிலையில் ஏரியில் நீர்மட்டம் 3 அடிக்கும் குறைவாகவே உள்ளது.
ஏரியின் பாதிபகுதிகளுக்குமேல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதியாககவும் மீதம் விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பு குடியிருப்பு பகுதிகளில் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர், குடும்ப அடையாள அட்டை, வீட்டு வரி போன்ற அனைத்து அரசு உரிமைகளும் உள்ளது. புறம்போக்கு இடங்களை ஆக்கிரமிப்பதை அரசு தடுக்காமல் அவர்கள் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஏரியில் போர் அமைக்கப்பட்டு அருகிலுள்ள கிராமங்களுக்கும், சிப்காட் பகுதிக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் ஏரி நீரில் கலப்பதால் தற்போது நீரின் தன்மை மாறிவிட்டது. எனவே மக்கள் 10 கி.மீ தள்ளியுள்ள ஆத்துப்பாக்கம் ஏனும் கிராமத்திற்கு சென்று குடிநீர் கொண்டுவரும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணி துறையிடம் இருக்கும் இந்த ஏரியை சரியாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பாதுகாத்தால் சோழியம்பாக்கம், ஆத்துப்பாக்கம், தேர்வழி, வழுதலம்பேடு, ரெட்டம்பேடு போன்ற பல விவசாய கிராமங்களில் நெற்பயிர் விலைச்சல் அதிகமாகும். ஏரி தூர் வாரப்படாத காரணத்தால் நிலத்தடி நீரும் சரியாக தேங்குவதில்லை. எனவே தற்போது இப்பகுதி மக்கள் மூன்று போகம் விளைவிக்கும் நிலங்களை இரண்டு போகத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக